தமிழக செய்திகள்

கூடலூர் புதிய பஸ் நிலையத்தில்பூட்டி கிடக்கும் புறக்காவல் நிலையம்

கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் பூட்டி கிடக்கிறது.

தினத்தந்தி

கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையையொட்டி கூடலூர் புதிய பஸ் நிலையம் அமைந்து உள்ளது. இந்த பஸ் நிலையம் அருகே தனியார் பார் மற்றும் மனமகிழ்மன்றங்கள் உள்ளன. இரவு நேரத்தில் மதுபான பார்களுக்கு செல்லும் குடிமகன்கள் மற்றும் திருடர்கள் பஸ் நிலையத்தை சுற்றித்திரிகின்றனர்.

இதனால் பெண்கள் மற்றும் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பஸ் நிலைய பகுதியில் போலீசா பாதுகாப்பு பகுதியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கூடலூர் நகராட்சி சார்பில், புறக்காவல் நிலையம் கட்டப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் கடந்த சில வருடங்களாக போலீசார் யாரும் வருவதில்லை. இதனால் புறக்காவல் நிலையம் பூட்டியே கிடக்கிறது. எனவே கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை