தமிழக செய்திகள்

பழனி காந்தி மார்க்கெட்டில் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்தது

பழனி காந்தி மார்க்கெட்டில் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்தது

பழனியில் நேற்று இரவு பெய்த மழையால் நகரின் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதற்கிடையே பழனி காந்தி மார்க்கெட் பகுதியில் இன்று காலை வழக்கம் போல் வியாபாரிகள் கடையை திறந்து வியாபாரம் செய்தனர். அப்போது மார்க்கெட்டின் உள்பகுதியில் உள்ள ஒரு கடையின் முன்பக்க மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து அங்கிருந்து வியாபாரிகள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். நல்ல வேளையாக சுவர் இடிந்து விழுந்தபோது அங்கு யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

SCROLL FOR NEXT