தமிழக செய்திகள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 3 டாக்டர்கள் உள்பட 31 பேருக்கு கொரோனா

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று 3 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் ஏழை-எளிய, நடுத்தர வர்க்கத்தினர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள், செவிலியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப டாக்டர்கள், செவிலியர்களுக்கு பணிச்சுமையும் அதிகரிக்கிறது. நோயாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற உன்னத நோக்கில் டாக்டர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றி வருகிறார்கள்.

கொரோனா வார்டில் பணிபுரியும் டாக்டர்களும் கொரோனாவின் மாயவலையில் சிக்கி விடுகிறார்கள். செவிலியர்கள், தூய்மை பணியாளர்களும் கொரோனா தொற்று ஆளாகி வருகின்றனர். இந்தநிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று 3 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் என 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பணிபுரிந்த ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிலேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா நோயாளிகளை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ள டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 31 பேர் கொரோனா பிடியில் சிக்கி இருப்பது சக டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு