சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 5 டன் பூக்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் மல்லிகைப்பூ கிலோ ரூ.445-க்கும், முல்லை ரூ.160-க்கும், காக்கடா ரூ.1,125-க்கும், செண்டுமல்லி ரூ.50-க்கும், பட்டுப்பூ ரூ.50-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.10-க்கும், அரளி ரூ.70-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.120-க்கும் ஏலம் போனது. காக்கடா பூவை தவிர அனைத்து பூக்களும் விலை குறைந்தே ஏலம் போனது.