தமிழக செய்திகள்

இம்மாத இறுதிக்குள் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்படும் - பழனிசாமி பேச்சு

விவசாயிகளின் நீண்ட நாள் கனவான அத்திக்கடவு- அவிநாசி திட்ட பணிகளை தொடங்க, இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும் என்று முதல்-அமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

கோவையில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்-அமைச்சர் பழனிசாமி,

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கனவான அத்திக்கடவு- அவிநாசி திட்ட பணிகளை தொடங்க, இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும். பயிர் காப்பீடு திட்டத்தில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பயிர் காப்பீடு திட்டத்தில் அதிக விவசாயிகள் சேர்ந்துள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் ரூ 6,648 கோடியே 35 லட்சம் பயிர் காப்பீடு வழங்கப்பட்டு உள்ளது.

ரூ 1,652 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு இந்த மாத இறுதிக்குள் அடிக்கல் நாட்டப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.