சென்னை
அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் வரும் 28-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளது என கூறப்பட்டு உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். நாளை மறுநாள் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் சபாநாயகருடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி உள்ளார்.