குலசேகரன்பட்டினம்:
மணப்பாட்டில் ரூ.4.46 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை மணப்பாடு பஞ்சாயத்து தலைவர் கிரேன்ஸிட்டாவினோ இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இளநிலை மின் பொறியாளர்கள் சூசை ராஜ், வேலாயுதம், விஜி, உமா மகேஸ்வரி மற்றும் களப்பணியாளர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய டிரான்ஸ்பார்மர் மூலம் மணப்பாடு புதுகுடியேற்று பகுதியிலுள்ள 113 மின் பயனீட்டாளர்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும்.