தமிழக செய்திகள்

ஆழ்வார்பேட்டை ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

தினத்தந்தி

சென்னை:

தமிழகம் முழுவதும் நேற்று முதல் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2-ம் தவணையாக ரூ.2 ஆயிரமும், 14 மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரேஷன் கடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ரூ. 2000 நிவாரணம், மளிகை பொருட்கள் வழங்கும் பணி குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார்.முதலமைச்சரின் திடீர் வருகையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது