தமிழக செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கற்றல் மேம்பாட்டு பயிற்சி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கற்றல் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

தினத்தந்தி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான 3 நாட்கள் கற்றல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைம தாங்கினார். கணிப்பொறியியல் துறைத்தலைவர் சி.வேலாயுதம் வரவேற்று பேசினார். இதில் ஆங்கிலத்துறையின் முன்னாள் தலைவர் கே.தணிகாசலம், சென்னை ரீச் அகடமி பயிற்றுனர், ஆராய்ச்சி அறிஞர் எஸ்.வெங்கடசுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்கள் பள்ளிக்கல்வியை முடித்து கல்லூரி படிப்பை தொடங்கும் போது ஏற்படும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பயிற்சி அளித்தனர். இதில் கணினி துறை பேராசிரியர்கள் பாலகிருஷ்ணன், பிருந்தா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியை ஜெயந்தி நன்றி கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது