தமிழக செய்திகள்

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு பரிசு

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிசு வழங்கினார்.

போலீஸ் நிலையத்தில் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு அவ்வப்போது ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்குவது வழக்கம். அதே போன்று தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள தென்பாகம் போலீஸ் நிலையத்தில் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆய்வு மேற்கொண்டார். அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு முக்கிய வழக்குகளுக்கான கோப்புகள், ஆவணங்கள், போலீஸ் நிலையத்தில் உள்ள வசதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

போலீசாருக்கு பரிசு

அப்போது போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார். மேலும் சிறப்பாக பணியாற்றிய ஏட்டுகள் மாரியப்பன், பாலசுப்பிரமணியன், லட்சுமணன், போலீசார் சேகர், அருண்சுந்தர் ஆகியோருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கி பாராட்டினார்.

போலீஸ் நிலையங்களை சுத்தமாக பராமரிக்கவும் அறிவுறுத்தினார். தொடர்ந்து தென்பாகம் போலீஸ் நிலைய வளாகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மரக்கன்றுகளை நட்டினார். ஆய்வின் போது, தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) ராமலட்சுமி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்