தமிழக செய்திகள்

திருச்செந்தூர் காஞ்சி பள்ளியில்சுற்றுச்சூழல் மன்ற தொடக்க விழா

திருச்செந்தூர் காஞ்சி பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற தொடக்க விழா நடந்தது.

தினத்தந்தி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்ற தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு எழுத்தாளர் மற்றும் சூழலியல் நிபுணர் கோவை சதாசிவம் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் செல்வவைஷ்ணவி வரவேற்று பேசினார். திருச்செந்தூர் நகராட்சித் தலைவர் சிவஆனந்தி கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். பள்ளியில் புதிதாக தொடங்கப்பட்ட சுற்றுச்சூழல் மன்றத்தின் தலைவராக மாணவர் திவிகார்த்திக், துணை தலைவராக மனோசங்கர், செயலாளராக மாணவி சுந்தரி, துணை செயலாளராக அட்சயா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளை ஒருங்கிணைப்பாளர் அரசி அறிமுகம் செய்தார். தொடர்ந்து மன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுற்றுச்சூழல் குறித்த உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து சுற்றுச்சூழல் தொடர்பாக மாணவ மாணவிகள் சிறப்பு விருந்தினருடன் கலந்துரையாடல் நடந்தது. மன்ற செயலாளர் சுந்தரி நன்றி கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்