தமிழக செய்திகள்

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்தார்.

தினத்தந்தி

சென்னை,

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் உற்சவம் கடந்த ஒன்றாம் தேதி தெடங்கி கேலாகலமாக நடைபெற்று வருகிறது. மெத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற நிலையிலும் அத்திவரதர் காட்சியளிப்பார்.

இந்நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அத்திவரதரை தரிசிக்க டெல்லியிலிருந்து இன்று சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் ஆளுநர் வரவேற்றனர்.

சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காஞ்சீபுரம் செல்லும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பிற்பகல் 3 மணி முதல் மாலை 4 மணிக்குள் அத்திவரதரை தரிசிக்க உள்ளார். இதனையடுத்து காஞ்சீபுரத்தில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது