தமிழக செய்திகள்

ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம் உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையால் ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.

தினத்தந்தி

செம்பட்டி அருகே மலையடிவார பகுதியில் ஆத்தூர் காமராஜர் அணை உள்ளது. இந்த அணை திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளப்பட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி ஆகிய பகுதிகளில் மழைநீரால் நீர்வரத்து ஏற்படும். கடந்த சில தினங்களாக மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அணையின் மொத்த நீர்மட்டம் 23.5 அடி. தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 16 அடியாக உயர்ந்து உள்ளது. ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆத்தூர் நீர்ப்பாசன விவசாயிகள் கூறுகையில், தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்தால், ஒரு வார காலத்திற்குள் ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி தண்ணீர் மறுகால்பாயும் என்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்