தமிழக செய்திகள்

டாக்டர் மீது தாக்குதல்; 2 வாலிபர்கள் கைது

உத்தனப்பள்ளியில் டாக்டர் மீது தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டளனர்.

ராயக்கோட்டை

உத்தனப்பள்ளி பங்களா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 35). டாக்டர். இவர் உத்தனப்பள்ளியில் கிளினிக் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை பீரேபாளையத்தை சேர்ந்த வாலிபர் சந்தோஷ் காயத்துடன் கிளினிக்கிற்கு வந்து சிகிச்சை அளிக்குமாறு டாக்டரிடம் கேட்டுள்ளார். அப்போது நோயாளிகளை பார்த்து கொண்டிருப்பதால் சிறிது நேரம் காத்திருக்குமாறு டாக்டர் கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் தனது நண்பர்களை அழைத்து வந்து டாக்டரை தாக்கி மிரட்டல் விடுத்தார். இது குறித்து டாக்டர் வெங்கடேசன் உத்தனப்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் (21), மது (23) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் சந்தோஷ், நந்தீஷ்குமார், சேகர், ஹரி ஆகிய 4 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு