தமிழக செய்திகள்

பஸ் கண்டக்டர் மீது தாக்குதல்

ராசிபுரத்தில் பஸ் கண்டக்டர் மீது தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

ராசிபுரம்

திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி சாணார்பாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 54). இவர் ராசிபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து காளிப்பட்டிக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் கண்டக்டராக அவர் வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த பஸ்சில் ராசிபுரம் டவுன் வி.நகர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை, அவரது மனைவி வெண்ணிலா (33), மகள் இசை ராணி (17) ஆகியோர் பயணம் செய்தனர்.

அப்போது அண்ணாதுரை பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதை பார்த்த கண்டக்டர், அண்ணாதுரையை படிக்கட்டில் இருந்து உள்ளே வரும்படி அழைத்துள்ளார். இதனால் கண்டக்டருக்கும், வெங்கடேசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பார்த்த வெண்ணிலா, கண்டக்டர் வெங்கடேசை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கண்டக்டர் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதேபோல் வெண்ணிலாவும் புகார் அளித்தார். இருதரப்பினரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை