தமிழக செய்திகள்

பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருட்டு... தட்டிக்கேட்ட விவசாயி மீது தாக்குதல்

பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருடியதை தட்டிக் கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோவை,

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீர் திருடியதை தட்டிக் கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்திய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே மலைப்பாளையம் கிராமத்தில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட கால்வாயில் இருந்து தனியார் மட்டை மில் தொழிற்சாலைக்கு, முறைகேடாக தண்ணீர் எடுக்கப்பட்டு வந்துள்ளது.

அதனை தட்டிக் கேட்ட விவசாயி ஆனந்த் மீது, தென்னை நார் உற்பத்தி மில் உரிமையாளர் லீலா கிருஷ்ணன் மற்றும் 10-க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மண்டை உடைந்த நிலையில் விவசாயி ஆனந்த் சிகிச்சைக்காக பல்லடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்