தமிழக செய்திகள்

சட்டக்கல்லூரி மாணவன் மீது தாக்குதல் - 2 போலீசார் சஸ்பெண்ட்...!

முககவசம் அணிவது தொடர்பான வாக்குவாதத்தில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 போலீசார் சஸ்பெண்ட் செய்ப்பட்டுள்ளனர்.

சென்னை,

முககவசம் அணிவது தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு போலீசாரை சஸ்பெண்ட் செய்து சென்னை மாநகர் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான ஹெட்கான்ஸ்டபிள் பூமிநாதன் முதல்நிலை காவலர் உத்திர குமார் ஆகிய இருவரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்

மேலும் காவல் ஆய்வாளர் நசீமா, ஆய்வாளர் ராஜன் உட்பட கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய மூவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கின் விவரம்:-

சென்னை கொடுங்கையூர் போலீசார் எம்.ஆர். நகர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வியாசர்பாடி புதுநகரை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம் (வயது 21) என்பவரிடம் முககவசம் அணியவில்லை என அபராதம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு மறுத்த அவர், போலீஸ்காரர் உத்தரகுமார் (31) என்பவரின் கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்துல்ரஹீம் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் கைதான சட்டக்கல்லூரி மாணவன் அப்துல் ரஹீம், போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தன்னை விடிய விடிய சரமாரியாக தாக்கியதாகவும், தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், மேலும் முககவசம் அணிந்து வந்த தன்னை முககவசம் அணியவில்லை என கூறி அபராதம் கேட்டதாகவும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார். இதுபற்றி விசாரிக்கும்படி வடக்கு மண்டல இணை கமிஷனருக்கு அவர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய வடக்கு மண்டல இணை கமிஷனர், சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் ஏட்டு பூமிநாதன் மற்றும் போலீஸ்காரர் உத்தரகுமார் ஆகிய இருவரும் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்பட்டு, தற்போது காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்