தமிழக செய்திகள்

தட்டார்மடம் அருகே தொழிலாளி மீது தாக்குதல்உறவினர் சிக்கினார்

தட்டார்மடம் அருகே தொழிலாளி மீது தாக்குதல் உறவினர் கைதுசெய்யப்பட்டார்.

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள தெற்கு ராமசாமிபுரம் அய்யா கோவில் தெருவைச் சேர்ந்த சுயம்புலிங்கம் மகன் சக்திவேல்துரை (வயது 39). தொழிலாளி. இவரும, அதே தெருவைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் சக்திவேல் (33) என்பவரும் அதே தெருவில் உள்ள அக்கா, தங்கையை திருமணம் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலுக்கும், அவரது மனைவி ரோஸ்லீனுக்கும் குடும்ப பிரச்சினை ஏற்பட்டத்தில் அவர் அவரது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல் நேற்று முன்தினம் மாமனார் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதை அறிந்த சக்திவேல்துரை அவரை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதில், சக்திவேல், அவரை அவதூறாக பேசி கல்லால் தாக்கியுள்ளார். காயமடைந்த சக்திவேல்துரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்து சக்திவேல்துரை கொடுத்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்