தமிழக செய்திகள்

வாகனத்தை சோதனை செய்த பெண் அதிகாரியை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி - திருப்பூரில் பரபரப்பு

தப்பியோடிய லாரி ஓட்டுநர் மற்றும் ஜே.சி.பி. ஆப்பரேட்டரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

திருப்பூர்,

புவியியல் மற்றும் கணிம வளத்துறையில் திருப்பூர் மாவட்டம் மற்றும் சேலம் மண்டல பறக்கும் படை ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பிரியா. இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளார்.

அந்த லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி 3 யூனிட் கிராவல் மண் கொண்டு செல்லப்பட்டதால், காவல் நிலையத்திற்கு வாகனத்தை எடுத்து வருமாறு பிரியா கூறியுள்ளார். ஆனால் லாரியின் ஓட்டுநர் ராசு மற்றும் ஜே.சி.பி. ஆப்பரேட்டர் அன்பரேசன் ஆகியோர் பிரியா மீது வண்டியை ஏற்றி கொல்ல முயற்சித்துள்ளனர். இது குறித்து பிரியா அளித்த புகாரின் பேரில், தப்பியோடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்