தமிழக செய்திகள்

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி

கடலூரில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளி மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

கடலூர், 

கடலூர் கோண்டூர் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் பரமசிவம் (வயது 35). தொழிலாளி. இவர் சம்பவத்தன்று நத்தப்பட்டு மெயின்ரோடு அருகே நடந்து சென்ற 7 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து, தனியாக தூக்கிச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக தெரிகிறது. இதுபற்றி சிறுமியின் தாய் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பரமசிவம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்