தமிழக செய்திகள்

விவசாயியிடம் சங்கிலி பறிக்க முயற்சி

பூதலூர் அருகே விவசாயியிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திருக்காட்டுப்பள்ளி:

பூதலூர் அருகே விவசாயியிடம் சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கிலி பறிக்க முயற்சி

பூதலூர் காங்கேயன் டவுன் சிப் பகுதியில் வசிப்பவர் முருகேசன் (வயது53). விவசாயி. இவரது அண்ணன் ராமலிங்கம் (56). இருவரும் பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் தட்டான் குளக்கரையில் உள்ள முனியாண்டவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு பூதலூர் செல்ல பஸ் நிற்கும் இடத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் முருகேசன் கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி சங்கிலியை பறிக்க முயன்றனர்.இதனால் அவர் சத்தம் போட்டதால் சங்கிலியை விட்டு விட்டு மோட்டார் சைக்கிள் திரும்பி சென்று விட்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் .பூதலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் முருகேசனிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட முயன்றது தஞ்சை மாவட்டம் அம்மன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சாமிநாதன் (23), வீரமணி (19) என்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்