தமிழக செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில்குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

தினத்தந்தி

சேலம்

சேலம் கொண்டலாம்பட்டி அடுத்த உத்தமசோழபுரம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் ரேஷ்மா (வயது 35). இவர், நேற்று தனது குழந்தைகளுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் நுழைவுவாயில் அருகே நின்று கொண்டு திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரேஷ்மாவை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

இதுகுறித்து ரேஷ்மா கூறும்போது, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மதம் மாறி ரமேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மாமியாரும், கணவரின் சகோதரியும் தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றேன், என்றார். இதனை தொடர்ந்து ரேஷ்மாவை குழந்தைகளுடன் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்