தமிழக செய்திகள்

கொலை முயற்சி வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுவிப்பு

குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முன்னாள் நகர தி.மு.க. செயலாளராக இருந்தவர் சுரேஷ். இவர் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் கத்தியால் குத்தப்பட்டார். இந்த வழக்கில் சசிகுமார், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து சுரேஷ் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து சசிகுமாரை கொலை செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுரேஷ், அனிதா ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில் என்னை சசிக்குமார் கொலை செய்ய முயன்றார். அதனால் சசிக்குமாரை கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்து இருந்தனர்.

அதன்பேரில், ஆறுமுகநேரி போலீசார் அனிதா ராதாகிருஷ்ணன் மீது கெலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படாததால் அனிதா ராதாகிருஷ்ணனை விடுவித்து தூத்துக்குடி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு