தமிழக செய்திகள்

பெண்ணிடம் தாலி சங்கிலி பறிக்க முயற்சி

பெண்ணிடம் தாலி சங்கிலி பறிக்க முயற்சி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

காரைக்குடி, 

காரைக்குடிக்கு அருகே உள்ள புதுவயல் நடராஜபுரத்தை சேர்ந்தவர் பிந்து (வயது 40). இவர் தனக்கு சொந்தமான மொபட்டில் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் அருகே உள்ள தெக்கூருக்கு சென்று விட்டு மீண்டும் புதுவயல் நோக்கி வந்து கொண்டிருந்தார். கல்லூர் ரயில்வே கேட் அருகே வரும்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென பிந்துவின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது பிந்து சத்தம் போடவே அந்த வாலிபர் பிந்துவை மொபட்டோடு சேர்த்து கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்றார். இதில் பிந்துவிற்கு காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை தேடி வருகின்றனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து