தமிழக செய்திகள்

சேலத்தில்3 கடைகளின் பூட்டை உடைத்து திருட முயற்சி

சேலத்தில் 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட மர்ம நபர்கள் முயற்சி செய்தனர்

தினத்தந்தி

சூரமங்கலம்

சேலம் புதுரோடு அருகே உள்ள சோளம்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 53). அதே பகுதியில் இவருக்கு சொந்தமான கட்டிடங்கள் உள்ளது. இதில் பர்னிச்சர், மரக்கடை உள்ளிட்ட 3 கடைகள் உள்ளன, நேற்று முன்தினம் இரவு இந்த கடைகளை பூட்டி விட்டு சென்றுள்ளனர். நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது 3 கடைகளின் இரும்பு ஷட்டர்கள் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இது குறித்து தகவல் கிடைத்ததும், சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்ட 3 கடைகளில் எந்த பொருளும் திருட்டுப்போகவில்லை, போலீசார் அங்கு பதிவாகி இருந்த கை ரேகைகளை பதிவு செய்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாவையிட்டு திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்