தமிழக செய்திகள்

பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

கழுகுமலையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கழுகுமலை:

கழுகுமலை பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று அதிகாலை அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு முகமூடி அணிந்து மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அந்த பெண்ணின் மீது பாய்ந்து கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அந்த பெண் சங்கிலியை இறுக பற்றிக் கொண்டு போராடினார். இதில் சங்கிலி அறுந்து அந்த பெண்ணிடம் சிக்கிக்கொண்டது. தொடர்ந்து அவர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்த மர்ம நபர் அவரை விட்டு விட்டு காட்டுப் பகுதியில் தப்பிஓடிவிட்டான்.

இதுகுறித்து உடனடியாக கழுகுமலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...