தமிழக செய்திகள்

11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கவனத்திற்கு...!

11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கு கடந்த மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் 11,12-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரும் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித்தேர்வு மாணவர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து