தமிழக செய்திகள்

தர்மபுரி அரசு அங்காடியில் ரூ.19 லட்சத்திற்கு பட்டுக்கூடுகள் ஏலம்

தர்மபுரி அரசு அங்காடியில் ரூ.19 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் ஏலம் போனது.

தர்மபுரி, அரசு பட்டுக்கூடு அங்காடியில் தினசரி பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். நேற்று 37 விவசாயிகள் 80 குவியல்களாக, 3 ஆயிரத்து 190 கிலே வெண் பட்டுக்கூடுகளை கெண்டு வந்தனர். இது சராசரியாக ரூ.620-க்கு ஏலம் பேனது. இவற்றின் மெத்த மதிப்பு ரூ.19 லட்சத்து 78 ஆயிரத்து 698 ஆகும். நேற்று ஒருநாள் நடந்த இந்த ஏலத்தால் ரூ.29 ஆயிரத்து 688 அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

SCROLL FOR NEXT