தமிழக செய்திகள்

மாவட்ட ஆயுதப்படை போலீசில் 25 வாகனங்கள் ஏலம்

மாவட்ட ஆயுதப்படை போலீசில் 25 வாகனங்கள் ஏலம் 20-ந்தேதி நடக்கிறது.

தினத்தந்தி

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

சிவகங்கை மாவட்ட காவல் துறையில் முதிர்ந்த நிலையில் கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் 9 மற்றும் இருசக்கர வாகனங்கள் 16 சேர்த்து மொத்தம் 25 வாகனங்கள் வருகிற 20-ந்தேதி காலை 10 மணிக்கு சிவகங்கை ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் விடப்படும் வாகனங்களை வருகிற 19-ந்தேதி காலை 8 மணி முதல் பார்வைக்கு வைக்கப்படும். ஏலம் எடுக்க விரும்புபவர்கள் ரூ.1,000 முன் வைப்பு தொகையினை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஜி.எஸ்.டி. விற்பனை வரி சேர்த்து 20-ந்தேதி அன்று உடனே செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது