தமிழக செய்திகள்

ஆடி கிருத்திகை விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் திருத்தணி முருகன் கோவிலில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

ஆடி கிருத்திகை விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருத்தணி முருகன் கோவிலில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணீத் ஆய்வு மேற்கொண்டார்.

திருத்தணி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 21-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 5 நாட்கள் ஆடி கிருத்திகை விழா நடைபெற உள்ளது. இதில் 21-ந் தேதி அஸ்வினி விழாவும், 22-ந் தேதி பரணி விழாவும், 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் ஆடி கிருத்திகை விழா மற்றும் தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருக பெருமானுக்கு மலர் காவடிகள் எடுத்தும், தலைமுடி காணிக்கை செலுத்தியும் வழிபடுவார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆடி கிருத்திகை விழா நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு தளர்வுகள் அளித்துள்ள நிலையில் முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரணீத், கோவில் துணை ஆணையர் விஜயா ஆகியோர் சரவணப்பொய்கை திருக்குளம், பஸ் நிலையம், மலையடிவாரத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் தவிர்பதற்கான வழிமுறைகள், முக்கிய பிரமுகர்கள் கோவில் உள்ளே செல்வதற்கான வழிகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். ஆய்வு கூட்டத்தில் திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை, திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இருந்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு