தமிழக செய்திகள்

மேல்மருவத்தூரில் ஆடிப்பூர திருவிழா: செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை

மேல்மருவத்தூரில் வருகிற 21-ந்தேதி ஆடிப்பூர திருவிழா கொண்டாட செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்