சென்னை,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 26,00,885 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 25,47,005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 1,827 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் இன்று 23 பேர் (அரசு மருத்துவமனை - 20 பேர், தனியார் மருத்துவமனை - 3 பேர்) உயிரிழந்தனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 34,709 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் இன்று மேலும் 198 பேருக்கும், ஈரோட்டில் 146 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இன்று மேலும் 177 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 5,42,555 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 8,379 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 4,09,06,397 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,55,607 கொரோனா மாதிரிகள் பரிசேதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,00,19,058 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 1,54,998 பேருக்கு கொரோனா பரிசேதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 19,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 15,18,906 பேர் ஆண்கள் (இன்று-931 பேர்), 10,81,941 பேர் பெண்கள் (இன்று-699 பேர்). தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 திருநங்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு, குணமானவர்கள் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை விவரம்:-