தமிழக செய்திகள்

நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம், சி.டி.செல்வம் அமர்விற்கு கிடையாது- எச்.ராஜா தரப்பு

எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம், சி.டி.செல்வம் அமர்விற்கு அதிகாரம் கிடையாது என எச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் கூறி உள்ளார். #HRaja

தினத்தந்தி

சென்னை

பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே எச்.ராஜா, கோவில் ஊழியர்களை பற்றி அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை தொடர்ந்து கடந்த 17-ம் தேதி சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், 4 வாரத்திற்குள் எச்.ராஜா நேரில் ஆஜராகி இது தொடர்பான விளக்கத்தை அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை நீதிபதி தகில் ரமானி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், எச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து அவரை நேரில் ஆஜராக உத்தரவிடும் அதிகாரம், சி.டி.செல்வம் அமர்விற்கு அதிகாரம் கிடையாது என்றும், இது தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மட்டுமே நேரில் ஆஜராக உத்தரவிட முடியும் என்றும் அவர் கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு