தமிழக செய்திகள்

மனைவி இறந்த துக்கம் தாளாமல் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருப்பத்தூரில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பத்தூர் டவுன் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 45), ஆட்டோ டிரைவர். அவரது மனைவி மலர்விழி (32), சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மலர்விழி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் ராஜா மனைவி இறந்த துக்கம் தாளாமல் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று ராஜா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...