தமிழக செய்திகள்

களியக்காவிளை அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

களியக்காவிளை அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

களியக்காவிளை, 

களியக்காவிளை அருகே ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

களியக்காவிளை அருகே உள்ள அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 34), ஆட்டா டிரைவர். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர்கள் அனைவரும் பாலவிளை அருகே உள்ள மனைவியின் வீட்டில் வசித்து வந்தனர். அஜித்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு எனத்தெரிகிறது. கடந்த 27-ந் தேதி அஜித்குமார் மது போதையில் வீட்டுக்கு சென்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதங்கோடு பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அவரது வீட்டின் கதவு கடந்த 2 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று வீட்டின் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தனர். அப்போது அஜித்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்