தமிழக செய்திகள்

அஞ்சுகிராமத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

அஞ்சுகிராமத்தில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொணடார்.

அஞ்சுகிராமம்:

அஞ்சுகிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 39), ஆட்டோ டிரைவர். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 8 மாதங்களுக்கு முன்பு சிந்தாமணி பிரிந்து, மகன்களுடன் மதுரையில் உள்ள தனது தாய்வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மகேந்திரன் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த மகேந்திரன் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வழக்கம் போல் தாயார் சாப்பாடு கொடுக்க வந்த போது தான் தெரிய வந்தது.

இது குறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்