தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள இட்டகவேலி மங்காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தர் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருடைய மனைவி உஷா (34). இவர் குலசேகரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாலசுந்தர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் ரூ.8 லட்சம் கடன் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக பாலசுந்தர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு சென்ற உஷா மாலையில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, படுக்கை அறையில் பாலசுந்தர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாலசுந்தர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உஷா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் விரைந்து வந்து பாலசுந்தரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்