தமிழக செய்திகள்

கார் மோதி ஆட்டோ டிரைவர் பலி

தஞ்சையில் கார் மோதி ஆட்டோ டிரைவர் பலியானார்.

தினத்தந்தி

தஞ்சாவூர்:

தஞ்சை மானோஜிப்பட்டியில் உள்ள தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 41) ஆட்டோ டிரைவர். சம்பவத்தன்று சுரேஷ் தஞ்சை ரெயிலடியில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் ஆட்டோவை ஓட்டி சென்றார். தஞ்சை ராமநாதன் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது அந்த வழியாக வந்த கார் மோதியது. உடனே டிரைவர் காரை நிறுத்தாமல் சென்று விட்டார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சுரேசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்