தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவர் தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சரவணம்பட்டி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்தவர் விஜயராகவன் (வயது 39), ஆட்டோ டிரைவர். இவர் கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விஜயராகவன் மனைவி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார்.

இதனால் விஜயராகவன் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த விஜயராகவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்