தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவர் தற்கொலை

கிருஷ்ணகிரியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்டார்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி பாரதியார் நகரை சேர்ந்தவர் தவுலத் பாஷா (வயது 38), ஆட்டோ டிரைவர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இவருக்கு விபத்து ஏற்பட்டு, அவரது தலை மற்றும் காலில் அடிபட்டது. இதனால் கடந்த 2 வாரமாக ஆட்டோ ஓட்ட முடியாமல் வருமானம் இல்லாததால் மன உளைச்சலுடன் காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்