தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவர் தற்கொலை

நாலாட்டின்புத்தூர் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகயுள்ள பெருமாள்பட்டியை சேர்ந்த அந்தோணிமுத்து மகன் ஜோதி(வயது 33). ஆட்டோ டிரைவர். இவருக்கு அனனபூரணம் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். ஜோதி தினமும் மது குடித்து விட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அத்துடன் குடித்துவிட்டு மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்தும் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரை தந்தை கண்டித்துள்ளார். இதில் மனமுடந்த ஜோதி நேற்று முன்தினம் மது குடித்து விட்டு பெருமாள்பட்டி - கழுகாகலபுரம் செல்லும் சாலையில் உள்ள பழைய கல்குவாரி குட்டையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி மற்றும் போலீசார் அங்கு சன்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்