தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவர் தற்கொலை

திருக்குறுங்குடி அருகே, ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

தினத்தந்தி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே, ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

ஆட்டோ டிரைவர்

திருக்குறுங்குடி அருகே நம்பிதலைவன் பட்டயம் மேல தெருவைச் சேர்ந்தவர் சுசிகர் ராஜ். இவருடைய மகன் தங்க லட்சுமணன் (வயது 21). ஆட்டோ டிரைவரான இவர் தன்னுடைய தந்தை சுசிகர் ராஜிடம் புதிய ஆட்டோ வாங்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

இதனால் மனமுடைந்த தங்க லட்சுமணன் கடந்த மாதம் 8-ந்தேதி திருக்குறுங்குடி பூங்காவில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

உடனே அவரை உறவினர்கள் மீட்டு ஏர்வாடியில் தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக வள்ளியூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

விசாரணை

பின்னர் தங்க லட்சுமணனை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த தங்க லட்சுமணனின் தாயார் மாரியம்மாள் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்