தமிழக செய்திகள்

ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று காலை சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது, ஆட்டோ தொழிலாளர்களை பாதிக்கின்ற அபதாரத்தை கைவிட வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு ரூ.4 லட்சத்துக்கான வீடு கட்டும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நலவாரிய பென்சன் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாவட்ட பொருளாளர் அப்பாதுரை, தூத்துக்குடி மாவட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க செயலாளர் முருகன், சி.ஐ.டி.யு மாவட்ட இணை செயலாளர் காசி, ஆட்டோ சங்க பொருளாளர் தளவாய் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு