தமிழக செய்திகள்

ஆட்டோ திருட்டு

பாபநாசம் அருகே ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பாபநாசம், ஜூன்.25-

பாபநாசம் அருகே ஆட்டோ திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆட்டோ திருட்டு

பாபநாசம் அருகே பண்டாரவாடை சூபி நகரில் வசித்து வருபவர் முகமதுஅலி(வயது34). இவர் தனக்கு சொந்தமான ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள ஆட்டோவை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த முகமதுஅலி பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோவை திருடி சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

கைது

இந்தநிலையில் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் மெயின் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தவர் அதிராம்பட்டினம் ஏரிக்கரை காலனியைச் சேர்ந்த ரகுமான் (38) என்றும் இவர் பண்டாரவாடையில் இருந்து முகமது அலிக்கு சொந்தமான ஆட்டோவை திருடி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரகுமானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...