தமிழக செய்திகள்

ஏ.வி.ராஜு பேச்சு - நடிகர் கருணாஸ் மீண்டும் புகார்

ஏற்கனவே பொய்யான தகவலை பரப்புவதாக அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது புகார் அளித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் புகார் அளித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கூவத்தூர் விவகாரம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியது சர்ச்சையானது. இதில் தனது பெயரை கெடுக்கும் நோக்கத்திலும், அவதூறு பரப்புவதாகவும் எந்தவித ஆதாரமுமின்றி ஏ.வி.ராஜு பேசியுள்ளார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே பொய்யான தகவலை பரப்புவதாக அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு மீது புகார் அளித்திருந்த நிலையில் தற்போது மீண்டும் புகார் அளித்துள்ளார்.

ஏ.வி.ராஜு அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பியுள்ளார். ஏ.வி ராஜு மீதும் பல யூடியூப் சேனல்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுத்து வீடியோ பதிவுகளை நீக்கி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது