தமிழக செய்திகள்

விழிப்புணர்வு மாரத்தான்

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.

தினத்தந்தி

நாமக்கல்லில் தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி தேசிய ஒற்றுமை மாரத்தான் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் நேரு யுவகேந்திரா சார்பில் நடந்த இந்த ஒற்றுமை தின ஓட்டத்தில் ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். பின்னர் நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளையொட்டி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் ஏற்கப்பட்டது. அப்போது இந்திய நாட்டின் ஒற்றுமையை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் எனவும் அனைத்து அரசு அலுவலர்களும் உறுதி ஏற்றனர். இதில் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) தேவிகா ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்