தமிழக செய்திகள்

பள்ளிகளில் ஒமைக்ரான் வைரஸ் குறித்து விழிப்புணர்வு - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஒமைக்ரான் வைரஸ் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. புதிதாக உருவெடுத்துள்ள இந்த ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா மற்றும் தமிழகத்திலும் தொற்று பாதிப்பு பரவாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகளில் ஒமைக்ரான் தடுப்புக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இறைவணக்க கூட்டம், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது எனவும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்