தமிழக செய்திகள்

விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி

விபத்தில்லா தீபாவளி குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிக்கல்:

கீழ்வேளூர் தீயணைப்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி குருக்கத்தி அரசு மேல்நிலைப்பள்ளி, கடம்பங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஓர்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. இதில் மாணவ-மாணவிகளுக்கு எவ்வாறு பட்டாசு வெடிப்பது மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை குறித்தும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கீழ்வேளூர் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சுப்பையன், சிறப்பு நிலை அலுவலர் ராஜராஜசோழன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். இதேபோல் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்வேளூர் ஒன்றியம் வடக்காலத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் தலைமையாசிரியர் பத்மாவதி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் வர்ணிகா ஸ்ரீ, ஆசிரியர்கள் செந்தில்வேலன், ருபான்சியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை