தமிழக செய்திகள்

நேரு யுவ கேந்திரா சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்

மாவடிப்பண்ணையில் நேரு யுவ கேந்திரா சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தினத்தந்தி

தென்திருப்பேரை:

மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இந்திய அஞ்சல் துறை திருச்செந்தூர் உப கோட்டம் இணைந்து நடத்திய எனது மண் எனது தேசம் ஆழ்வார்திருநகரி ஒன்றிய அளவிலான அமுத கலச யாத்ரா ஊர்வலம் மாவடிப்பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முதன்மை பயிற்றுநர் ஆறுமுகம் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியை விஜி சிறப்புரையாற்றினார். தென்திருப்பேரை நகரப்பஞ்சாயத்து தலைவர் மணிமேகலை ஆனந்த், கவுன்சிலர் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்திரா நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இசக்கி, இந்திய அஞ்சல் துறை திருச்செந்தூர் உப கோட்ட உதவி கண்காணிப்பாளர் ஐடா எபநேசர், திருச்செந்தூர் தலைமை அஞ்சலகர் ரவிமோகன், சமூக ஆர்வலர் பிரவீன்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

ஊர்வலத்தில் பள்ளி மாணவ- மாணவிகள, அஞ்சலக ஊழியர்கள், நேருயுவ கேந்திரா இளைஞர் மன்ற பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கலச யாத்திராவில் கலந்துகொண்ட மாணவ-மாணவிகள் ஒன்றியத்தில் உள்ள மண் கலசத்தில் கிராமத்தில் இருந்து கொண்டு வந்த மண்ணை கலந்தனர். அதனை தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியர் கிங்ஸ்லி நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து