தமிழக செய்திகள்

பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கலவை அருகே பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தினத்தந்தி

கலவையை அடுத்த வாழைப்பந்தல் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட மேல்புதுப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமணம் மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் வாழைப்பந்தல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூஜா கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணம் குறித்தும், அதிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விளக்கினார்.

மேலும் பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் நடைபெற்றால் உடனடியாக இது குறித்து போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்